தேசிய செய்திகள்

பொதுத்தேர்வுகள் முறைகளில் சீர்திருத்தங்கள் கொண்டுவர மத்திய அரசு திட்டம்

வருகிற 13-ந்தேதி வரை பொதுமக்கள் கருத்து சொல்லலாம் என மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

சென்னை,

பொதுத்தேர்வுகள் துறையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டு இருக்கிறது. இதற்காக உயர்மட்ட தேர்வுகள் சீர்திருத்தக் குழுவையும் அமைத்து உள்ளது. இந்த நிலையில் தேர்வுகளில் என்னென்ன மாதிரியான சீர்திருத்தங்கள் கொண்டுவர வேண்டும் என்பது குறித்து கருத்துகளையும், யோசனைகளையும் மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் தெரிவிக்கவும் மத்திய அரசு வாய்ப்புகளை வழங்கியுள்ளது.

அதன்படி, மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், பாட நிபுணர்கள், தொழில் நிறுவனங்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள், பொதுமக்கள் தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்வதினால் தேர்வு முறைகள் மிகவும் வெளிப்படைத்தன்மை வாய்ந்ததாகவும், திறமையானதாகவும் மாற்ற உதவும் என மத்திய அரசு நம்புகிறது.

அவ்வாறு கருத்துகள், யோசனைகளை "hptf” என டைப் செய்து 7827042830 என்ற எண்ணுக்கு வாட்ஸ்-அப் வாயிலாக , https://examreforms-taskforce.dopt.gov.in இணையதளம் வாயிலாகவும், 1800-180-4747 என்ற தொலைபேசி எண் வாயிலாகவும், ExamReformsTaskforce@dopt.gov.in என்ற மின்னஞ்சல் வாயிலாகவும் தெரிவிக்கலாம். கருத்துகளை ஆங்கிலம், இந்தி அல்லது தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் வருகிற 13-ந்தேதி வரை சொல்லலாம் என மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.