புதுடெல்லி,
நாடு முழுவதும் வெங்காயம் விலை அதிகரித்து வருகிறது. வெங்காயம் விலையை கட்டுப்படுத்தும் நோக்கத்தில், மத்திய அரசு தனது மொத்த கையிருப்பில் உள்ள வெங்காயத்தை 'கண்டா எக்ஸ்பி ரஸ் ரெயில் மூலம், வெங்காயம் அதிகமாக பயன்படுத்தப்படும் சென்னை, மதுரை உள்ளிட்ட நகரங்களுக்கு அனுப்பி வைத்தது.
அங்கு மத்திய அரசு அமைப்புகள் மூலம் சில்லறை விலையில் கிலோ ரூ.35-க்கு வெங்காயம் விற்கப்பட்டது. இதற்கிடையே, விற்பனை தொடங்கிய முதல் 10 நாட்களில் 17 நகரங்களில் சுமார் 4 ஆயிரம் டன் வெங்காயத்தை மத்திய அரசு விற்பனை செய்திருப்பதாக மத்திய நுகர்வோர் விவகார செயலாளர் நிதி காரே தெரிவித்துள்ளார். இதனால் வெங்காயம் விலை சற்று குறைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.