தேசிய செய்திகள்

4 கால்களுடன் விற்பனைக்கு வந்த கோழி: ஆர்வமுடன் பார்த்து சென்ற பொதுமக்கள்

கோழியை விற்பனை செய்ய போவதில்லை என்று கடை உரிமையாளர் தெரிவித்தார்.

பாலக்காடு,

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் சொரணூர் பகுதியை சேர்ந்தவர் ஜாசிம். இவர் கோழி இறைச்சி கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு விற்பனைக்காக, மன்னார்காட்டில் இருந்து கோழிகள் கொண்டு வரப்பட்டன. அதில் ஒரு கோழிக்கு 4 கால்கள் இருந்தன. இதை ஜாசிம் ஆச்சரியமாக பார்த்தார். அந்த கோழிக்கு 2 கால்கள் நீளமாகவும், 2 கால்கள் சிறியதாகவும் காணப்பட்டது.

ஆனால், நடக்கும் போது பின்பகுதியில் உள்ள 2 கால்கள் தரையை தொடுவதில்லை. இந்த அபூர்வ கோழி பற்றி அறிந்த அப்பகுதி மக்கள் ஆர்வமுடன் வந்து பார்வையிட்டனர். மேலும் மேலும் அந்த கோழியை விற்பனை செய்ய போவதில்லை என்று கடை உரிமையாளர் தெரிவித்தார்.