சென்னை,
தென் மண்டல மாநில முதல்வர்கள் மாநாடு சென்னையை அடுத்த கோவளத்தில் நாளை நடைபெறுகிறது. இந்த மாநாட்டிற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமை தாங்குகிறார். தமிழக முதல் அமைச்சர் விஜய் துணைத்தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த மாநாட்டில் கேரளா, கர்நாடகா, ஆந்திர பிரதேசம், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களின் முதல் மந்திரிகளும் தலைமை செயலாளர்கள் உள்ளிட்டோரும் கலந்து கொள்கிறார்கள்.
இந்த மாநாட்டில் பங்கேற்க உள்துறை அமைச்சர் அமித்ஷா இரவு 9 மணியளவில் சென்னை வந்தார். அமித்ஷாவை வரவேற்க முதல் அமைச்சர் விஜய், மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு வருகை தந்துள்ளார். முதல் அமைச்சராக விஜய் பதவியேற்ற பிறகு முதல் முறையாக இன்று அமித்ஷாவை சந்திக்க உள்ளார். மாமல்லபுரம் ஹோட்டலில் இன்று இரவு நடைபெறும் இரவு உணவு விருந்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் விஜய் உள்பட மாநில முதல்வர்கள் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.