தேசிய செய்திகள்

இன்று மாலை சோனியா, ராகுல் காந்தியை சந்திக்கிறார் முதல்-அமைச்சர் விஜய்

தமிழக முதல்-அமைச்சர் விஜய் டெல்லி சென்றுள்ளார்.

சென்னை,

டெல்லியில் நாளை (11-ந்தேதி) பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் நாட்டின் அனைத்து மாநில முதல்-மந்திரிகளும் பங்கேற்க உள்ளனர். இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்-அமைச்சர் விஜய் இன்று காலை 10 மணியளவில் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

இந்த நிலையில், டெல்லி சென்றுள்ள தமிழக முதல்-அமைச்சர் விஜய் இன்று மாலை காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனை தொடர்ந்து மாலை 6.30 மணியளவில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர்களை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.

தவெக கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு முதல்முறையாக காங்கிரஸ் தலைவர்களை முதல்-அமைச்சர் விஜய் சந்திக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.