தேசிய செய்திகள்

சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்க சிஜேபி முயற்சி; பீகார் மந்திரி பேச்சு

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் சிஜேபி சார்பில் போராட்டம் நடைபெற்றது.

பாட்னா,

நாட்டின் சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்க சிஜேபி முயற்சிப்பதாக பீகார் மந்திரி தெரிவித்துள்ளார்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தன்னிச்சையாக செயல்பட்டு சில முடிவுகளை எடுத்துள்ளதாக காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) உள்பட பல்வேறு கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.

மேலும், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

சிஜேபி போராட்டம்

இதனிடையே, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் இன்று கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

அதேவேளை, இந்த போராட்டத்தில் போலீசார் அனுமதி மறுத்த நிலையில் தடையை மீறி போராட்டம் நடத்திய பலரை போலீசார் கைது செய்தனர். சிஜேபி போராட்டம் காரணமாக டெல்லியில் ரெயில், மெட்ரோ, சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.

சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்க சிஜேபி முயற்சி

இந்நிலையில், நாட்டின் சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்க சிஜேபி முயற்சிப்பதாக பீகார் மந்திரி ராம்கிர்பால் தெரிவித்துள்ளார். பீகாரில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் அம்மாநில கூட்டுறவுத்துறை மந்திரியாக ராம்கிராம்பால் செயல்பட்டு வருகிறார்.

அவர் சிஜேபி போராட்டம் குறித்து இன்று கூறுகையில், கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினருக்கு நாட்டின்மீதோ, எதேனும் விவகாரங்கள் மீதோ கவலையில்லை. கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் ஒருநோக்கம் பதிவு செய்யப்படாத அவர்களின் அரசியல் அமைப்பை வலிமைப்படுத்துவதே நோக்கம். எந்த விலை கொடுத்தாவது சட்டம்-ஒழுங்கு காப்பாற்றப்பட வேண்டும். சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதை தடுக்க தேவையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT