தேசிய செய்திகள்

வந்தே மாதரம் முழு பாடல் பாடிய விவகாரம்; தேசிய மாநாட்டு கட்சி- காங்கிரஸ் இடையே மோதல்

கடந்த 15-ம் தேதி டெல்​லி​யில் உள்ள காங்​கிரஸ் தலை​மையகத்​தில், சுதந்​திர தின விழா நடைபெற்றது. இதை முன்​னிட்டு நடை​பெற்ற தேசி​யக் கொடியேற்​றும் நிகழ்ச்​சி​யின்​போது வழக்​கத்​துக்கு மாறாக வந்தே மாதரம் பாடல் முழு​மை​யாக பாடப்​பட்​டது.

ஸ்ரீநகர்:

ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் ‘வந்தே மாதரம்’ முழுப் பாடலும் இசைக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதற்கு தேசிய மாநாட்டு கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளதால், இந்தியா கூட்டணிக்குள் மீண்டும் மோதல் வெடித்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் சர்வதேச திரைப்பட விழா நடைபெற்றது. விழாவில் ‘வந்தே மாதரம்’ பாடலின் முழு வடிவமும் இசைக்கப்பட்டது. அப்போது தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, ஜம்மு-காஷ்மீர் முதல்-மந்திரி உமர் அப்துல்லா மற்றும் சிறப்பு விருந்தினர்கள் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர். இதற்கு காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், விழாவில் ‘வந்தே மாதரம்’ முழுப் பாடல் இசைக்கப்பட்ட வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்தார்.

மீண்டும் கருத்து வேறுபாடு

மேலும், வரிகள் நீக்கப்பட்ட ‘வந்தே மாதரம்’ பாடலை மட்டுமே இசைக்க வேண்டும் என்ற காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை கூட்டணி கட்சியான தேசிய மாநாட்டு கட்சியும் ஏற்றுக்கொண்டு, அதன்படி செயல்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். ஆனால், காங்கிரஸின் இந்த நிலைப்பாட்டுக்கு தேசிய மாநாட்டு கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அக்கட்சியின் மூத்த தலைவர் பஷிர் அகமது கூறுகையில், “வந்தே மாதரம் பாடலை எப்போது பாட வேண்டும், எவ்வளவு பாட வேண்டும் என்பதை கூட்டணி கட்சிகள் எங்களுக்கு உத்தரவிட வேண்டாம். இதை யாராலும் எங்கள் மீது திணிக்க முடியாது. அனைத்தும் மக்களின் விருப்பத்தைப் பொறுத்தது. மக்களின் மீது எதையும் திணிப்பதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்” என்றார்.இதனால், ‘வந்தே மாதரம்’ பாடல் விவகாரத்தில் இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு இடையே மீண்டும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ் முடிவு

முன்னதாக, கடந்த ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி டெல்​லி​யில் உள்ள காங்​கிரஸ் தலை​மையகத்​தில், சுதந்​திர தின விழா நடைபெற்றது. இதை முன்​னிட்டு நடை​பெற்ற தேசி​யக் கொடியேற்​றும் நிகழ்ச்​சி​யின்​போது வழக்​கத்​துக்கு மாறாக வந்தே மாதரம் பாடல் முழு​மை​யாக பாடப்​பட்​டது. இதனால் அதிர்ச்​சி​யடைந்த சோனியா காந்​தி, வந்தே மாதரம் பாடு​வதை நிறுத்​து​மாறு சைகை காட்​டிய​தாக விமர்​சனம் எழுந்தது.

அடுத்த இரு நாட்களில் டெல்லியில் நடைபெற்ற காங்​கிரஸ் செயற்​குழு கூட்​டத்​தில், 1937-ம் ஆண்டு மகாத்மா காந்தி, ஜவஹர்​லால் நேரு, ரவீந்​திர​நாத் தாகூர், சுபாஷ் சந்​திர போஸ் மற்​றும் சர்​தார் வல்​லப​பாய் படேல் உள்​ளிட்ட மூத்த தலை​வர்​களின் முன்​னிலை​யில் நிறை​வேற்​றப்​பட்ட தீர்​மானத்​தின்​படி கட்​சி​யின் அனைத்து நிகழ்ச்​சிகளி​லும் வந்தே மாதரம் பாடலின் முதல் 2 பத்​தி​கள் மட்​டுமே பாடப்​படும் என முடிவு எடுக்​கப்​பட்​டது காங்கிரஸின் இந்த முடிவை மத்தியில் ஆளும் பாஜக கடுமையாக விமர்சித்து வருகிறது.

SCROLL FOR NEXT