புதுடெல்லி
ஈரான் நாட்டுக்கு எதிராக அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கியதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஈரானியர்கள் பலியாகி உள்ளனர். இதனால் மேற்காசியாவில் கடும் பதற்றம் காணப்படுகிறது.
இந்த மோதலை அடுத்து, வளைகுடா நாடுகளில் நடக்க இருந்த 10-ம் வகுப்புகளுக்கான சி.பி.எஸ்.இ. தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இந்த நிலையில், 12-ம் வகுப்புக்கான சி.பி.எஸ்.இ. தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளன என தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே 12-ம் வகுப்புக்கு கடந்த 7-ந்தேதி நடக்க இருந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. 7-ந்தேதி நிலைமையை பற்றி மறுஆய்வு செய்யப்படும். அதன்பின்னர் 9-ந்தேதி அன்று, அடுத்து நடைபெறவுள்ள தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், 12-ந்தேதி முதல் 16-ந்தேதி வரையிலான 12-ம் வகுப்புகளுக்கான சி.பி.எஸ்.இ. தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளன. 16-ந்தேதி முதல் நடைபெற உள்ள மீதமுள்ள தேர்வுகள் தொடர்பாக முடிவுகள் எடுப்பதற்கு முன், 14-ந்தேதி நிலைமையை மறுஆய்வு செய்வோம் என தேர்வு துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.