தேசிய செய்திகள்

தசரா விழாவில் ராவணன் உருவ பொம்மையுடன் 'கரப்பான்பூச்சி' உருவ பொம்மையை எரிக்க முடிவு

ராவணனின் படையில் உள்ள அசுரர்களின் வரிசையில் கரப்பான் பூச்சியின் உருவபொம்மை யும் சேர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் (சி.ஜே.பி.) போராட்டங்கள் அரசியல் ரீதியாக சூடுபிடித்துள்ள நிலையில், இந்த ஆண்டு தசராவை முன்னிட்டு டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் ராவணன், கும்பகர்ணன், மேகநாதன் ஆகியோரின் உருவ பொம்மைகளுடன், 30 அடி உயர 'கரப்பான் பூச்சி' உருவ பொம்மையையும் எரிக்க அமைப்பாளர்கள் முடிவு செய் துள்ளனர். டெல்லியின் பிதாம்பூரில் ராமலீலாவை ஏற்பாடு செய்யும் கேசவ் ராமலீலா சமிதியால் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

கரப்பான் பூச்சியானது குப்பையையும், அசுத்தத்தையும் குறிக் கிறது. 'தூய்மையான இந்தியா', தூய்மையான டெல்லி' பிரசாரங்களின் ஒரு பகுதியாக இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது என்று அந்த குழு தெரிவித்தது.

இதுகுறித்து பேசிய அந்த குழுவின் தலைவரும், பா.ஜனதா எம்.எல்.ஏ.வுமான அசோக் கோயல், "இந்த முடிவு அரசியல் உள்நோக்கம் கொண்டது அல்ல. தீமையின் மீது நன்மையின் வெற்றியை ஊக்குவிப்பதும், தூய்மையின் செய்தியை வலுப்படுத்துவதுமே இதன் நோக்கம். ராவணனின் படையில் உள்ள அசுரர்களின் வரிசையில் கரப்பான் பூச்சியின் உருவபொம்மை யும் சேர்க்கப்படும்" என்றார்.

இருப்பினும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நடத்திய போராட்டங்களை தொடர்ந்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT