தேசிய செய்திகள்

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் அபிஜித் தீப்கே புதிய வீடியோ வெளியீடு

இந்த மிகப்பெரிய வெற்றியை சாத்தியமாக்க உதவிய அனைவருக்கும் நன்றி என அபிஜித் தீப்கே தெரிவித்து உள்ளார்

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் நேற்று தர்மேந்திர பிரதான் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, ஜந்தர் மந்தர் பகுதி யில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட னர். சில நாட்களுக்கு முன்பு மோதல்கள், கண்ணீர்ப்புகை வீச்சு மற்றும் காயங்களுக்கு சாட்சியாக இருந்த அந்த போராட்டக் களம், நேற்று சந்தோஷக் களமாக மாறியது. போராட்டக்காரர்கள் ஒருவரையொருவர் கட்டிப்பிடித் துக் கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மூவர்ண தேசியக் கொடியை அசைத்தனர். இசைக்கருவிகளை இசைத்து நடனம் ஆடினர்.

பல இளைஞர்கள் அம்பேத்கரின் உருவப்படங்களை உயர்த்திப் பிடித்தனர். தங்கள் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுக்கொண்டதால் இளைஞர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.இளைஞர்கள் வெற்றிக்கொண்டாட்டத்தில் இருக்கும் நிலையில் இன்று காலை புதிய வீடியோ ஒன்றை வெளியிட்ட அபிஜித் தீப்கே, இந்த மிகப்பெரிய வெற்றியை சாத்தியமாக்க உதவிய அனைவருக்கும் நன்றி என தெரிவித்து உள்ளார். மேலும் அந்த வீடியோவில், போராட்டத்திற்கு ஆதரவு அளித்தவர்கள் மட்டுமின்றி, தன்னை விமர்சித்தவர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார். அவர்களின் விமர்சனங்கள் தன்னை மேலும் மேம்படுத்திக் கொள்ள உதவியதாகவும், கரப்பான் ஜனதா கட்சியின் முதல் பிரசாரத்தில் மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கும் அவை உறுதுணையாக இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

முன்னதாக நேற்று ஜந்தர் மந்தரில் பேசிய அப்ஜித் தீப்கே கூறியதாவது: இந்த ராஜினாமா ஜனநாயகப் போராட்டத்தின் வலிமைக்குச் சான்று. இந்த அரசாங்கத்தில் ராஜினாமாக்கள் நிகழ்வதே இல்லை என்று அவர்கள் சொல்வதுண்டு. ஆனால், உலகை வளைக்கக்கூடிய ஒருவர் இருந்தால், உலகம் வளைந்துதான் கொடுக்கும் என்று நாங்கள் சொல்கிறோம். நீங்கள் எங்களை 'கரப்பான் பூச்சிகள்' என்று அழைத்திருக்காவிட்டால், நான் இந்தியா திரும்பியிருக்க மாட்டேன். நாட்டின் இளைஞர்கள் வீதிக்கு வந்திருக்க மாட்டார்கள். தர்மேந்திர பிரதானின் ராஜினாமா நிகழ்ந்திருக்காது" என்றார்.