ஜம்மு
ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஜம்மு நகரில் பந்தலப் பகுதியில் பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இதில், தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், பாலத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்துள்ளது.
இந்த விபத்தில் தொழிலாளர்கள் சிலர் சிக்கி கொண்டனர். இந்த தகவல் அறிந்ததும், தேசிய பேரிடர் மீட்பு படையினர், இந்திய ராணுவ வீரர்கள், போலீசார், அரசு நிர்வாகத்தினர் சம்பவ இடத்திற்கு சென்றனர். அவர்களுடன் உள்ளூர் மக்களும் சேர்ந்து, தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதில் தொழிலாளர்கள் இருவர் உயிருடன் மீட்கப்பட்டு உள்ளனர். காயமடைந்த அவர்களை வாகனத்தில் ஏற்றி சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். 4 பேர் இன்னும் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர் என கூறப்படுகிறது. அவர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. எம்.எல்.ஏ. ஷியாம்லால் சர்மாவும் சம்பவ பகுதிக்கு சென்றுள்ளார். அவர் மீட்பு பணிகளை ஆய்வு செய்து வருகிறார்.