கோழிக்கோடு
கோழிக்கோடு மாவட்டம் குன்னமங்கலம் பகுதியை சேர்ந்தவர் அபினவ் (வயது 19). இவர் கோழிக்கோட்டில் உள்ள ஒரு கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து வருகிறார். அவர், ஒரு இளம் பெண்ணை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறினார். இதை நம்பிய இளம் பெண்ணை அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தனது நண்பர் வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இதில் இளம்பெண் கர்ப்பமடைந்தார். இதை அறிந்த இளம்பெண்ணின் பெற்றோர், அபினவ் வீட்டாரை அழைத்து இருவருக்கும் திருமணம் செய்து வைக்குமாறு பேசினர். அதற்கு அபினவ் மற்றும் அவரது குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்தனர். இதுகுறித்து குன்னமங்கலம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் இளம்பெண்ணை அபினவ் திருமணம் செய்வதாக ஏமாற்றி கர்ப்பமாக்கியது தெரியவந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, அபினவ்வை போலீசார் கைது செய்தனர்.