தேசிய செய்திகள்

ஆபாச படம் பார்த்ததை தட்டிக்கேட்ட தாய்மீது பாலியல் புகார் கூறிய மகன்; விசாரணையில் அம்பலம்

ஆபாச படம் பார்த்த மகனை தட்டிக்கேட்ட தாய்மீது பாலியல் பலாத்கார புகார் கூறிய மகன் சிறப்பு அதிகாரி விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே கடக்காவூரை சேர்ந்த 37 வயது பெண்ணுக்கு 4 குழந்தைகள் உள்ளனர். கணவர் துபாயில் பணிபுரிந்து வருகிறார். தம்பதிக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டதையடுத்து அந்த பெண் வேறு திருமணம் செய்துகொண்டார். இதையடுத்து அந்த பெண் மீது முதல் கணவர் கடந்த வருடம் டிசம்பர் மாதம் கடக்காவூர் போலீசில் புகார் அளித்தார். அதில், தனது 14 வயது மகனை தன்னுடைய மனைவி பலாத்காரம் செய்ததாக கூறியிருந்தார்.

இது தொடர்பாக போலீசார் போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து பெண்ணை கைது செய்தனர். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே தான் தவறு செய்யவில்லை என்றும், தன்மீது பொய்யான குற்றச்சாட்டு கூறி வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது என்றும், எனவே உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் அந்த பெண் கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட் புகாரில் சந்தேகம் இருக்கிறது என்றும், ஒரு பெண் ஐபிஎஸ் அதிகாரி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என்றும் உத்த்ரவிட்டது. இது தவிர அந்த பெண்ணுக்கு ஜாமின் வழங்கவும் உத்தரவிட்டது. இதையடுத்து ஒரு மாதத்துக்கு பிறகு அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

இதற்கிடையே வழக்கை விசாரிக்க ஐபிஎஸ் அதிகாரியான திவ்யா கோபிநாத் நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில் விசாரணை நடைபெற்றது. சிறுவனுக்கு கவுன்சிலிங் அளித்து, மருத்துவ பரிசோதனையும் நடத்தப்பட்டது. இதுதெடர்பான விசாரணை அறிக்கையை திவ்யா கோபிநாத் கேரள ஐகோர்ட்டில் தாக்கல் செய்தார்.

அந்த அறிக்கையில் 14 வயது சிறுவனை தாய் பலாத்காரம் செய்ததாக கூறப்பட்ட புகாரில் உண்மையில்லை. சிறுவன் அடிக்கடி தாயின் செல்போனில் ஆபாச படங்களை பார்த்து வந்துள்ளார். இதை அறிந்த தாய் அவனை கண்டித்துள்ளார். இதனால் ஏற்பட்ட கோபத்தால் தான் தன்னுடைய தாய் மீது பொய்யான புகார் கூறியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளtதாக தகவல் வெளியாகி உள்ளது.

SCROLL FOR NEXT