தேசிய செய்திகள்

அதிகாரப் பதவிக்கு வந்து 25 ஆண்டுகள் நிறைவு; விநாயகர் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு

பிரதமர் நரேந்திர மோடி, அரசு பொறுப்பில் 25 ஆண்டுகளை நிறைவு செய்ததையொட்டி, டெல்லி சரோஜினி நகரில் உள்ள ஸ்ரீ விநாயகர் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தார்.

பிரதமர் மோடி கடந்த 2001-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி குஜராத் முதல்-மந்திரியாக பதவியேற்றார். 2014-ம் ஆண்டு மே மாதம் வரை குஜராத் முதல்-மந்திரியாக இருந்த அவர், அதன்பின்னர் பிரதமராக பொறுப்பேற்றார். இதன்மூலம் அரசு பொறுப்பில் தொடர்ந்து 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.

பிரதமர் மோடி 25 ஆண்டுகள் தொடர்ந்து அரசு தலைவராக பணியாற்றியதை பாஜகவினர் கொண்டாடி வருகிறார்கள். இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, அரசு பொறுப்பில் 25 ஆண்டுகளை நிறைவு செய்ததையொட்டி, டெல்லி சரோஜினி நகரில் உள்ள ஸ்ரீ விநாயகர் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தார். '

இதுகுறித்து பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “புதுடெல்லியில் உள்ள ஸ்ரீ விநாயகர் கோவிலில் இன்று பூஜை செய்து வழிபட்டேன். நாடு முழுவதும் உள்ள எனது குடும்ப உறுப்பினர்களின் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் நல்ல ஆரோக்கியத்துக்காக விநாயகரிடம் பிரார்த்தனை செய்தேன். விக்னங்களை நீக்கும் விநாயகரின் அருள் அனைவருக்கும் நலனை வழங்கட்டும். நாடு தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் பயணிக்கட்டும்” என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT