புதுடெல்லி,
என்.சி.இ.ஆர்.டி. 8-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் நீதித் துறை குறித்த பாடப்பகுதி சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனால் அந்த புத் தகத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளது. இந்நிலையில், இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது 'எக்ஸ்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:- என்.சி.இ.ஆர்.டி. பாடப்புத்தக பிரச்சினையில் பிரதமர் மோடி, போலியான கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார். பாதிப்பை கட்டுப்படுத்தும் நடவடிக் கையாக, நீதித்துறை குறித்த விமர்சனம் தனக்கு அதிருப்தி ஏற்படுத்தி இருப்பதாக செய்தியை கசிய விட்டுள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக, பாடப்புத்தகங்களில் நச்சு பரவச்செய்து பெரும் பாதிப்பு ஏற்படுத்திய போலி கல்வியாளர்கள் கும்பலுக்கு பிரதமர் மோடிதான் தலைமை தாங்குகிறார். பாடப்புத்தகங்களை மாற்றி எழுதும் நாக்பூர் வகுப்புவாத கும்பலை வழிநடத்தி, வடிவமைத்து வருகிறார். அது தான் உண்மையான என்.சி.இ.ஆர்.டி.
தற்போது, இந்த விவகாரத்தில் தனக்கு சம்பந்தம் இல்லை என்று அவர் ஒதுங்க முயற்சிப்பது அப்பட்டமான பாசாங்குத்தனம். பாடப்புத்தகங்களை மாற்றி எழுத முடிவு செய்யப்பட்டது பற்றி சுப்ரீம் கோர்ட்டு முழு அளவி லான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.