தேசிய செய்திகள்

நாடாளுமன்றம் கூடும் காலத்தை காங்கிரஸ் கட்சியும் மாற்றியமைத்திருக்கிறது: பாஜக பதிலடி

நாடாளுமன்றம் கூடும் காலத்தை காங்கிரஸ் கட்சியும் மாற்றியமைத்திருக்கிறது என்று காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டிற்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது.

புதுடெல்லி,

அற்பத்தனமான காரணங்களைக் காட்டி நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரை நடத்தாமல் மத்திய அரசு தள்ளிப் போட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டினார். கட்சியின் காரியக் கமிட்டிக் கூட்டத்தில் பேசிய அவர், குறைகளைக் கொண்டுள்ள ஜிஎஸ்டி வரியை அமல்படுத்துவதில் மத்திய அரசு அவசரம் காட்டியது. நேரு, இந்திரா காந்தி ஆகியோரின் பங்களிப்புகளை நீக்கிவிட்டு, நவீன இந்தியாவின் வரலாற்றை உருவாக்கும் முயற்சியில் மோடி அரசு ஈடுபட்டு வருகிறது. மோடி தனது பொறுப்புகளில் இருந்து தப்பி ஓட முடியாது என்று கடுமையாக விமர்சித்து இருந்தார்.

இந்த நிலையில், நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர் குறித்து சோனியா காந்தி கூறியுள்ள குற்றச்சாட்டுகளை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி மறுத்துள்ளார். தேர்தல்களும் நாடாளுமன்ற கூட்டத்தொடரும் ஒன்றாக வந்துவிடக்கூடாது என்பதற்காக சில சமயங்களில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். கடந்த காலங்களில் காங்கிரஸ் ஆட்சியில் இவ்வாறு பலமுறை நடந்திருப்பதாகவும் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

வழக்கமாக நவம்பர் மாதம் மூன்றாவது வாரத்தில் தொடங்கும் நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர், டிசம்பர் மூன்றாவது வாரம் வரை நடைபெறும். ஆனால், இந்த ஆண்டு, டிசம்பர் இரண்டாவது வாரத்தில் துவங்கி 10 நாட்கள் மட்டுமே குளிர் கால கூட்டத்தொடர் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளி வருகின்றன.

வடகிழக்கு மாநிலங்களுக்கு மிக உயரிய மதிப்பளித்தவர் பிரதமர் மோடி: மத்திய மந்திரி சோனோவால்

பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சு

மார்க்கெட் நடுவே கேட்பாரற்று கிடந்த சூட்கேஸ்... உள்ளே நிர்வாண நிலையில் இளம்பெண் சடலம் - பீகாரில் பரபரப்பு

கணவனை கொலை செய்துவிட்டு நாடகமாடிய புதுப்பெண்: கிடுக்கிப்பிடி விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்

பிரதமர் மோடி வருகிற 11-ந்தேதி புதுச்சேரி வருகை