தேசிய செய்திகள்

அருண் ஜெட்லி மறைவுக்கு காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி இரங்கல்

அருண் ஜெட்லி மறைவுக்கு காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அருண் ஜெட்லி உடல் நலக்குறைவால் இன்று காலமானார். 66-வயதான அருண் ஜெட்லி, கடந்த சில மாதங்களாகவே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்.

இதன் காரணமாக, கடந்த மக்களவை தேர்தலிலும் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டார். அருண் ஜெட்லியின் மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர், உள்துறை அமைச்சர் உள்பட பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியும், அருண் ஜெட்லி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். சோனியா காந்தி, வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், அருண் ஜெட்லியின் பொதுச்சேவை எப்போதும் நினைவுகூரப்படும் என்று தெரிவித்துள்ளார்.