தேசிய செய்திகள்

ராஜீவ் காந்தியின் 30-ஆவது நினைவு நாள்: ராகுல்காந்தி எம்.பி. மலர்தூவி மரியாதை

ராஜீவ் காந்தியின் 30-ஆவது நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் ராகுல்காந்தி எம்.பி. மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

புதுடெல்லி,

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 30-ஆவது நினைவு நாள் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. இதையடுத்து அவரது படத்திற்கு காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அந்தவகையில் டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் ராகுல்காந்தி எம்.பி. மலர்தூவி மரியாதை செலுத்தினார். மேலும், பல்வேறு அரசியல் தலைவர்கள் அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகின்றனர்.