இதுதொடர்பாக தன்னுடன் கலந்தாலோசனை நடத்தவில்லை என்று மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் வி.எம்.சுதீரன் அதிருப்தியில் இருந்தார். இதனால், சமீபத்தில் அரசியல் விவகார குழுவில் இருந்து ராஜினாமா செய்தார். அவரை சமாதானப்படுத்த கட்சியின் பொதுச்செயலாளர் தாரிக் அன்வர், அவரை சந்திக்க திட்டமிட்டு இருந்தார்.
இந்தநிலையில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் இருந்து சுதீரன் நேற்று ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை கட்சி தலைவர் சோனியாகாந்திக்கு அவர் அனுப்பி வைத்தார். கட்சியின் அமைப்பு பிரச்சினைகளில் மேலிடம் தலையிட தவறியதால் இம்முடிவை எடுத்ததாக அவர் கூறியுள்ளார்.