துபாய்,
கேரளாவில் உள்ள கண்ணூர் தொகுதி எம்.பி. கே.சுதாகரன், கடந்த 27-ந் தேதி துபாயில் உள்ள நரம்பியல் சிகிச்சை சிறப்பு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். நினைவாற்றல் பாதிப்பு, வலிப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் காரணமாக அவ ருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. முதலில் 48 மணி நேரம் கண்காணிப்பில் வைக்க டாக்டர்கள் அறிவுறுத்தினர்.
இதற்கிடையே, தொகுதி மறுவரையறை மசோதா நாடாளுமன்றத்தில் நாளை (திங்கட்கிழமை) தாக்கல் செய்யப்பட உள் ளதால், எம்.பி.க்களின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த நிலையில், நேற்று மாலை அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இதையடுத்து அவர் அங்கிருந்து புறப்பட்டு இன்று காலை டெல்லி வந்தடைய உள்ளார். காங்கிரஸை சேர்ந்த அவர், அப்படியே மக்களவை கூட்டத்தில் பங்கேற்பார் என்று தெரிகிறது.