தேசிய செய்திகள்

ரபேல் போர் விமானம் விவகாரத்தில் ஆய்வு மேற்கொள்ள சிஏஜியிடம் காங்கிரஸ் வலியுறுத்தல்

ரபேல் போர் விமானம் விவகாரத்தில் ஆய்வு மேற்கொண்டு அறிக்கையை தாக்கல் செய்ய சிஏஜியிடம் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

புதுடெல்லி,

ரூ. 60,150 கோடி மதிப்பிலான ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான விரிவான தணிக்கையை மேற்கொண்டு அறிக்கையை தாக்கல் செய்ய சிஏஜியிடம் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி ராஜீவ் மகரிஷியை சந்தித்து பேசிய காங்கிரஸ் தலைவர்கள் அடங்கிய குழு, உண்மையை வெளிக்கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சி ஏற்கனவே செப்டம்பர் மாதம் 19-ம் தேதி சிஏஜியை சந்தித்து தன்னுடைய வலியுறுத்தலை முன்வைத்தது. இப்போது இரண்டாவது முறையாக சந்தித்துள்ளது.

பிரான்ஸ் மற்றும் இந்தியா இடையிலான ஒப்பந்தம் தொடர்பான புதிய தகவல்களை காங்கிரஸ் கட்சி சமர்பித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரபேல் ஊழல் இப்போது இந்தியாவின் மிகப்பெரிய பாதுகாப்பு ஊழலாக வெளிப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தினசரி தகவல்கள் வெளியாகினாலும், மூடி மறைக்கப்படுகிறது மற்றும் பாதுகாப்பு அமைச்சரிடம் இருந்து தெளிவான பதில் கிடையாது எனவும் விமான ஒப்பந்தம் விவகாரத்தில் ஊழல் நடைபெற்றுள்ளது. இதுதொடர்பாக உடனடியாக விசாரணையை மேற்கொள்ள வேண்டும் எனவும் காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் இணைக்கப்பட்டது தொடர்பான தகவல்களையும் வழங்கியுள்ளது.

SCROLL FOR NEXT