பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-
தமிழ்நாட்டில் அரசியல் சூழல் மாறிய அடுத்த கணமே திமுகவுக்கு துரோகம் இழைத்துள்ளது காங்கிரஸ். காங்கிரஸின் நலனுக்காக 30 ஆண்டுகளாக உழைத்த திமுகவின் முதுகில் குத்திவிட்டு, அதிகாரப் பசிக்காக, வாய்ப்பு கிடைத்த உடனேயே உறவை துண்டித்துள்ளது.
அரசியல் காற்று மாறி வீசியவுடன் இப்போது காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு மாறிவிட்டது. முதல் சந்தர்ப்பத்திலேயே அதிகாரத்துக்காக திமுகவின் முதுகில் குத்திவிட்டது. இப்பொது யார் முதுகில் ஏறி சவாரி செய்யலாம் என்று தெரிந்தும் திமுகவை கழற்றிவிட்டது. தமிழ்நாட்டில் நிலவும் சூழலைச் சற்று உற்றுநோக்கினால், கடந்த 25 முதல் 30 ஆண்டுகளாக, காங்கிரஸ் கட்சியானது தி.மு.க.வுடன் மிக நெருக்கமான உறவைப் பேணி வந்தது.
பல தருணங்களில், தி.மு.க.வுடனான கூட்டணியே காங்கிரசை பல்வேறு நெருக்கடிகளிலிருந்து பாதுகாத்து மீட்டெடுத்தது. சொல்லப்போனால், 2014-ஆம் ஆண்டிற்கு முந்தைய 10 ஆண்டுகள் காங்கிரஸ் தலைமையிலான அரசு நீடித்ததே பெரும்பாலும் தி.மு.க.வின் ஆதரவால்தான். ஆயினும், அரசியல் சூழல் மாறியவுடன் தி.மு.க.வுக்கு துரோகம் செய்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்