தேசிய செய்திகள்

அருணாச்சல பிரதேசம், சிக்கிமில் அடுத்தடுத்து நிலநடுக்கம்

அருணாச்சல பிரதேசத்தில் இன்று ஒரே நாளில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது.

புதுடெல்லி,

அருணாச்சல பிரதேசத்தில் மேற்கு காமெங் பகுதியில் இன்று அதிகாலையில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நிலநடுக்கம் அதிகாலை 2.34 ,மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 3.9 ஆக பதிவாகி உள்ளது. இதனையடுத்து, அதே பகுதியில் மீண்டும் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் மதியம் 1.39 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 2.7 ஆக பதிவானது. அருணாச்சல பிரதேசத்தில் இன்று ஒரே நாளில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது அப்பகுதி மக்களிடையே பரபரபபை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், சிக்கிம் மாநிலத்தின் நம்சி பகுதியில் மாலை 5.58 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 2.1 ஆக பதிவாகி உள்ளது.

முன்னதாக, ஆபகானிஸ்தானில் இன்று காலை 9.30 மணியளவில் ரிக்டர் 4.6 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.