தேசிய செய்திகள்

தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி: ’பாஜகவை வீழ்த்திவிட்டோம்’ - மம்தா பானர்ஜி

பெண்களுக்குப் பிரதிநிதித்துவம் அளிக்க நாம் ஒரு மசோதாவைக் கொண்டுவரத் தேவையில்லை என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா,

தொகுதி மறுவரையறை, மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாக்கள் மக்களவையில் தோல்வியடைந்தது தொடர்பாக மேற்கு வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி பேசி இருப்பதாவது;

“பாஜக-வின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது. நாம் பாஜக-வை வீழ்த்திவிட்டோம். அவர்கள் அவமானப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தனிப்பெரும்பான்மை இல்லை. மற்றவர்களுடைய ஆதரவுகளுடன் அவர்கள் அதிகாரத்தில் இருந்து கொண்டு இருக்கின்றனர். பாஜக தலைவர்கள் தொகுதி மறுவரையறையை விரும்புகிறார்கள். ஏனென்றால் அவர்கள் நாட்டை பிரிக்க விரும்புகிறார்கள். பெண்களுக்குப் பிரதிநிதித்துவம் அளிக்க நாம் ஒரு மசோதாவைக் கொண்டுவரத் தேவையில்லை.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.