தேசிய செய்திகள்

நீதித்துறை குறித்து சர்ச்சைக்குரிய பாடம்: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு

8-ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்திற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

புதுடெல்லி,

8ம் வகுப்பு பாடப்புத்தகத்துக்கு தடை - உச்சநீதிமன்றம் அதிரடி நீதித்துறை குறித்து சர்ச்சைக்குரிய பாடம் இடம்பெற்ற 8-ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்திற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. என்சிஇஆர்டி வெளியிட்ட பாடப்புத்தகத்தில், நீதித்துறையில் ஊழல் மற்றும் நிலுவை வழக்குகள் குறித்து இடம்பெற்றிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த வழக்கை தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு விசாரித்தது. இதையடுத்து, சர்ச்சைக்குரிய புத்தகத்தை திரும்பப் பெறவும், ஆன்லைனில் கிடைக்காத வகையில் தடை செய்யவும் உத்தரவிடப்பட்டது. மேலும், இந்த விவகாரத்தில் மத்திய அரசு மற்றும் என்சிஇஆர்டி அதிகாரிகள் பதில் அளிக்கவும் உத்தரவிட்டு, விசாரணை மார்ச் 11-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.