நடிகர் பிரகாஷ் ராஜ் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்து கடவுள்களை அவதூறாக பேசியிருந்தார். அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு கண்டனங்கள் எழுந்தன. இந்த நிலையில் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் பானு பிரகாஷ் ரெட்டி, நடிகர் பிரகாஷ் ராஜ் இந்து கடவுள்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதற்காக இந்துக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறினார்.
ராமர், லட்சுமணர் குறித்து அவதூறாக பேசிய பிரகாஷ் ராஜிடம் நஷ்டஈடு கேட்டு அவரது வக்கீல்கள் மூலம் ரூ.100 கோடி கேட்டு அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் உள்ள நடிகர் பிரகாஷ் ராஜ் வீட்டுக்கு அவதூறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நடிகர் பிரகாஷ் ராஜ் மீது திருப்பதி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் புகார் செய்யப்பட்டுள்ளது.