காந்திநகர்,
நாட்டின் பல்வேறு பகுதிகளில் தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், நாள் முழுவதும் வெயிலில் நின்று பணியாற்றும் போக்குவரத்து காவல்துறையினரை வெயிலின் தாக்கத்தில் இருந்து காப்பதற்காக குஜராத்தில் புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி, பணியில் இருக்கும்போது, கடுமையான கோடை வெப்பத்தைச் சமாளிக்க போக்குவரத்து காவலர்களுக்கு உதவும் வகையில், அகமதாபாத் போக்குவரத்து காவல்துறை உயர் தொழில்நுட்ப குளிரூட்டும் ஜாக்கெட்டுகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதில் பேட்டரியால் இயங்கும் மின்விசிறிகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த ஜாக்கெட்டுகள் மிகவும் பயனுள்ளதாகவும், உடல் வெப்பநிலையைக் குறைத்து, வெப்பத்தால் ஏற்படும் உடல் சோர்வைப் போக்க உதவுவதாகவும் போக்குவரத்து காவலர்கள் தெரிவிக்கின்றனர்.