கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

மராட்டிய மாநிலத்தில் புதிதாக 5,031 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 216 பேர் பலி

மராட்டியத்தில் தற்போது 50,183 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை,

மராட்டிய மாநில சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, அங்கு புதிதாக 5,031 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மராட்டியத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 64,37,680 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 216 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததையடுத்து, கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,36,571 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 4,380 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதன் மூலம் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 62,47,414 ஆக அதிகரித்துள்ளது. மராட்டியத்தில் தற்போது 50,183 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக மராட்டிய மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.