தேசிய செய்திகள்

மராட்டியத்தில் மேலும் 729 பேருக்கு கொரோனா பாதிப்பு

மராட்டியத்தில் மேலும் 729 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மும்பை,

நாட்டிலேயே மராட்டியத்தில் தான் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. இதேபோல நாட்டில் பெருநகரங்களை பொருத்தவரை மும்பையில் தான் நோய் தொற்று அதிகளவில் உள்ளது.

இந்நிலையில் மராட்டியத்தில் இன்று புதிதாக 729 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் நகரில் நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 318 ஆக உள்ளது. மேலும் இன்று வைரஸ் தொற்றுக்கு 31 பேர் உயிரிழந்ததால், மொத்த பலியானோர் எண்ணிக்கை 400 ஆக அதிகரித்துள்ளது.

இதுதவிர 106 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமாகி ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பினர். இதன் மூலம் இங்கு கொரோனா பாதிப்பில் இருந்து குணமானவர்கள் எண்ணிக்கை 1388 ஆக உயர்ந்துள்ளது.