தேசிய செய்திகள்

இந்திய நீதித்துறையில் ஊழல்... 8-ம் வகுப்பு பாட சர்ச்சைக்கு என்.சி.இ.ஆர்.டி. மன்னிப்பு கோரியது

அந்த பாடம் முழுமையாக நீக்கப்பட்டு, புதிய கல்வி ஆண்டிற்குள் (2026-27) புதிய பாடம் வழங்கப்படும் என தெரிவித்து கொண்டது.

புதுடெல்லி

8-ம் வகுப்பு பாட புத்தகத்தில், இந்திய நீதித்துறையில் ஊழல் என்ற வகையில் சர்ச்சைக்குரிய பாடங்கள் இடம் பெற்றிருந்தன. இதனை கவனத்தில் எடுத்து கொண்ட சுப்ரீம் கோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்தது.

சுப்ரீம் கோர்ட்டுக்கு அவதூறு ஏற்படுத்த ஒருவரையும் நாங்கள் அனுமதிக்கமாட்டோம் என்று இந்திய தலைமை நீதிபதி சூர்யகாந்த் கூறினார். இதற்கு கடும் எதிர்ப்பும் தெரிவித்து உள்ளார்.

இந்நிலையில், சர்ச்சைக்குரிய வகையிலான இந்த பாடம் இடம் பெற்றதற்காக தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.) இன்று மன்னிப்பு கேட்டு கொண்டது.

அதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், 8-ம் வகுப்பு பாட புத்தகத்தில் நீதித்துறை குறித்து தவறான தகவல்கள் இடம்பெற்றது எதிர்பாராமல் நடந்த ஒரு தவறு. அதற்காக நாங்கள் மன்னிப்பு கேட்டு கொள்கிறோம்.

நீதித்துறையை நாங்கள் உயர்வாக மதிக்கிறோம். அந்த பாடம் முழுமையாக நீக்கப்பட்டு, புதிய கல்வி ஆண்டிற்குள் (2026-27) புதிய பாடம் வழங்கப்படும் என தெரிவித்து கொண்டது.