தேசிய செய்திகள்

கவுன்டவுண் நிறுத்தம்.. இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் விண்ணில் செலுத்தப்படுவதில் தாமதம்

கடைசி நிமிடத்தில் ராக்கெட் ஏவுவதற்கான கவுன்டவுண் நிறுத்தப்பட்டுள்ளது.

சென்னை,

ஐதராபாத்தை சேர்ந்த 'ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் விக்ரம்-1 என்ற ராக்கெட்டை உருவாக்கி உள்ளது. இது ஒரு பெரிய தொழில்நுட்ப முன்னேற்றமாகும். முழுவதும் கார்பன் கலப்புக் கட்டமைப்பைக் கொண்டு உருவாக்கப்பட்ட, 7 மாடிகள் கொண்ட, பல நிலைகளைக் கொண்ட ராக்கெட்டாகும்.

'ஆகமன்' (வருகை) எனப் பெயரிடப் பட்ட இந்த முதல் பயண ஏவுதல் திட்டம், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலுள்ள 1-வது ஏவுதளத்தில் இருந்து இன்று (சனிக்கிழமை) நண்பகல் 11.30 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்ட இருந்தது.

ஆனால் கடைசி நிமிடத்தில் ராக்கெட் ஏவுவதற்கான கவுன் டவுண் நிறுத்தப்பட்டுள்ளது. ராக்கெட் ஏவ 4 நிமிடங்கள் 59 வினாடிகள் இருந்த நிலையில், கவுன் டவுண் நிறுத்தப்பட்டது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ராக்கெட்டை விண்ணில் செலுத்துவது காலதாமதமாகியுள்ளதாக கூறப்படுகிறது. கோளாறு சரிசெய்யப்பட்டு, மீண்டும் ராக்கெட்டை விண்ணில் செலுத்தும் பணிகள் விரைவில் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.