தேசிய செய்திகள்

வங்கியில் ரூ.7½ கோடி கள்ளநோட்டுகள் கண்டுபிடிப்பு

கள்ளநோட்டு விவகாரம் தொடர்பாக 3 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் சஹாரன்பூரில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கிக்கிளையில் வங்கி தணிக்கை குழு ஆய்வு செய்தது. அதில், ரூ.7 கோடியே 40 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

இதுதொடர்பாக அந்த வங்கியின் மூத்த கோட்ட மேலாளர் ரவிகுமார் காஸ், நாணய கிடங்கு மேலாளர்கள் சுஷில் சர்மா, அமித்குமார் ஆகியோர் மீது வங்கியின் சிறப்பு அதிகாரி புகார் அளித்தார். அதன்பேரில், மேற்கண்ட 3 பேரும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் மீது வழக்குப்ப திவு செய்யப்பட்டது.

முன்னதாக, வங்கியில் இருந்து தலைமையகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட பணத்தை எண்ணியபோது, ரூ.4 லட்சத்து 30 ஆயிரம் குறைவாக இருந்தது. கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது, விஷால்குமார் என்ற கடைநிலை ஊழியர், கரன்சி கட்டுகளில் இருந்து நோட்டுகளை உருவியது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் மீது தனியாக வழக்கு பதிவு செய்யப்பட் டது. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

SCROLL FOR NEXT