தேசிய செய்திகள்

சிலிண்டர் வெடித்து விபத்து தம்பதி சாவு

கோலாரில் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் தம்பதி பாதாபமாக உயிரிழந்தனர்.

கோலார்

கோலார் மாவட்டம் முல்பாகல் தாலுகா குப்பதஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கிரிஷ். இவரது மனைவி நந்தினி. இவர்கள் 2 பேரும் கோலார் தாலுகா மணிகட்டா சாலையில் மசூதன் என்பவருக்கு சொந்தமான பண்ணை வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தனர்.

இந்தநிலையில் கடந்த 16-ந் தேதி சமையல் செய்யும்போது திடீரென்று கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் கிரிஷ் மற்றும் நந்தினி பலத்த காயம் அடைந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தம்பதியை மீட்டு சிகிச்சைக்காக பெங்களூரு விக்டோரியா ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர கண்காணிப்பு பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர்கள் 2 பேரும் நேற்று உயிரிழந்தனர்.

இதையடுத்து விக்டோரியா ஆஸ்பத்திரியில் அவர்கள் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கிடையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு விசாரணை நடத்தினர். விசாரணையில் காபி போடும்போது, சிலிண்டர் வெடித்து சிதறியிருப்பது தெரியவந்தது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த கோலார் புறநகர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT