கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

கேரளாவில் புதிதாக 39,955 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 97 பேர் பலி

கேரளாவில் இன்று புதிதாக 39 ஆயிரத்து 955 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

கேரளாவில் கொரோனா பரவல் தொடர்பான இன்றைய தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, கேரளாவில் இன்று 39 ஆயிரத்து 955 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அம்மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 20 லட்சத்து 20 ஆயிரத்து 834 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 4 லட்சத்து 38 ஆயிரத்து 913 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 33 ஆயிரத்து 733 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், கேரளாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 16 லட்சத்து 05 ஆயிரத்து 471 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தாக்குதலுக்கு இன்று 97 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கேரளாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6 ஆயிரத்து 150 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 39 ஆயிரத்து 656 பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.