தேசிய செய்திகள்

கேரள முதல்-அமைச்சராக 2வது முறையாக பதவியேற்றார் பினராயி விஜயன்!

கேரள முதல்-அமைச்சராக 2வது முறையாக பினராயி விஜயன் இன்று பதவியேற்றார்.

திருவனந்தபுரம்,

கேரளாவில் நடந்த சட்டசபை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் நேற்று முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் திருவனந்தபுரத்தில் நடை பெற்றது. இந்த கூட்டத்தில் புதிதாக பதவி ஏற்க இருக்கும் மந்திரிகளுக்கான இலாகாக்கள் ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில், திருவனந்தபுரம் சென்டிரல் ஸ்டேடியத்தில் இன்று நடந்த நிகழ்ச்சியில் கேரள முதல்-அமைச்சராக 2வது முறையாக பினராயி விஜயன் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் ஆரிப் முகமது கான் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அதைத்தொடர்ந்து பினராயி விஜயன் தலைமையில் அமையும் புதிய மந்திரி சபையில் உள்ள 21 மந்திரிகளும் பதவி ஏற்றுக்கொண்டனர்.

SCROLL FOR NEXT