தேசிய செய்திகள்

டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்தும் ரூபாய் நோட்டுகள் புழக்கம் புதிய உச்சம்!

இந்தியாவில் புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளின் மதிப்பு ரூ.43.46 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளின் மதிப்பு ரூ.43.46 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது கடந்த 5 ஆண்டுகளில் பதிவான அதிகபட்ச வளர்ச்சி என்று ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் ஊக்குவிக்கப்பட்டு வரும் நிலையில், நாட்டில் ரூபாய் நோட்டுகளின் புழக்கமும் அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

அதிகபட்ச அளவு

கடந்த அக்டோபர் 15-ம் தேதி நிலவரப்படி, நாட்டில் புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளின் மதிப்பு 13.5 சதவீதம் அதிகரித்து ரூ.43.46 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் பதிவான அதிகபட்ச அளவு இதுவாகும்.

இந்தப் பணப்புழக்க வளர்ச்சிக்கு, வெளிநாடுகளில் இருந்து வங்கிகள் திரட்டிய டாலர் முதலீடுகள் முக்கியக் காரணமாக இருந்தன.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT