தேசிய செய்திகள்

சிலிண்டர் விநியோகம்: இனி ஒடிபி கட்டாயம்

வரும் 1 ஆம் தேதி முதல் இந்த புதிய நடைமுறை அமலுக்கு வர உள்ளது.

நாட்டில் சிலிண்டர் பதுக்கல்களை தடுக்கவும் கள்ளச்சந்தையில் விற்பனையை நிறுத்தவும் ,தேவையான மக்களுக்கு சிலிண்டர் கிடைப்பதை உறுதி செய்யவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், வரும் 1 ஆம் தேதி முதல் முக்கிய விதி மாற்றம் ஒன்றை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

அதாவது, மே மாதத்தில் இருந்து ஓடிபி அடிப்படையிலான சிலிண்டர் டெலிவரி முறையை 100% நடைமுறைக்கு கொண்டு வர அரசும் சிலிண்டர் டெலிவரி நிறுவனங்களும் முடிவு செய்துள்ளன.

இதன்படி சிலிண்டர் முன் பதிவு செய்யும்போதே பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு ஓடிபி வரும். சிலிண்டர் உங்களுக்கு டெலிவரி செய்யப்படும் சமயத்தில் அந்த ஓடிபி-ஐ நீங்கள் பகிர வேண்டும். அவ்வாறு பகிர்ந்தால் மட்டுமே சிலிண்டர் டெலிவரி கிடைக்கும். இந்த ஓடிபி 4 இலக்க எண்களாக இருக்கும். இது இருந்தால் சிலிண்டர் டெலிவரி கிடைக்கும்.

ஏனெனில் இந்த ஒடிபியை பதிவிட்டால்தான் சிலிண்டர் டெலிவரி முடிவு பெற்றதாக நிறுவன சிஸ்டமில் அப்டேட் ஆகும். இதனால், சிலிண்டர் திருட்டு, கள்ள சந்தை விற்பனை ஆகியவை தடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைக்கு நாட்டில் 94 சதவீதம் இது நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் வரும் மே மாதத்திலிருந்து இதனை 100% நடைமுறைக்கு கொண்டு வர அரசு முடிவு செய்துள்ளது.