தேசிய செய்திகள்

நாடு முழுவதும் 12 ஆயிரம் இடங்களில் சிலிண்டர் சோதனை

இந்தியாவில் அதிகபட்சமாக கேரளாவில் 1000 இடங்களில் சோதனை நடத்தபட்டது குறிப்பிடத்தக்கது.

டெல்லி,

ஈரான் இஸ்ரேல் போர் காரணமாக சிலிண்டர் தட்டுப்பாடு இந்தியா முழுவதும் நிலவி வந்தது. இந்த நிலையில் மத்திய பெட்ரோலியத்துறை சார்பில் இந்தியா முழுவதும் சோதனைகள் நடத்தப்பட்டு சிலிண்டர்களை பதுக்கி வைத்திருப்பவர்களிடம் இருந்து சிலிண்டர்கள் கைப்பற்ற பட்டு வருகிறது. பதுக்கி வைத்திருக்கும் கேஸ் ஏஜென்சிகளை சீல் வைத்தும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

நாடு முழுவதும் 12,000 இடங்களில் சோதனைகள் நடத்தபட்டு வந்தது. சோதனை நடத்தியதன் மூலம் 15000 சிலிண்டர்கள் பிடிபட்டிருக்கிறது. அதிகபட்சமாக டெல்லியில் 600 சிலிண்டர்களும், மேற்கு வங்காளத்தில் 450சிலிண்டர்களும் பிடிபட்டிருக்கிறது. இந்தியாவில் அதிகபட்சமாக கேரளாவில் 1000 இடங்களில் சோதனை நடத்தபட்டது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிற்கு எல்.பி.ஜி. கேஸ் கொண்டு வந்த இரண்டு கப்பல்கள் இந்தியா வந்தடைந்துவிட்டது. இந்தியாவில் இனி சிலிண்டர்களின் தட்டுப்பாடு படிப்படியாக குறையும் என்று மத்திய பெட்ரோலியத்துறை கூறியுள்ளது.

SCROLL FOR NEXT