தேசிய செய்திகள்

”தங்கல்” படம் மூலம் பிரபலமான நடிகை ஷாயிரா வசிம் சென்ற கார் விபத்தில் சிக்கியது

”தங்கல்” படம் மூலம் பிரபலமான இளம் நடிகை ஷாயிரா வசிம் சென்ற கார் விபத்தில் சிக்கியது. இதில் அதிருஷ்டவசமாக காயமின்றி அவர் தப்பினார்.

ஸ்ரீநகர்,

மல்யுத்த வீரர் மகாவீர் சிங் போகத் வாழ்க்கையை தழுவி, கடந்தாண்டு இந்தியாவில் வெளியான திரைப்படம் டங்கல். இந்தப்படம் மிகப்பெரும் வசூலை வாரிகுவித்தது. இந்த படத்தில் கீதா போகத்தின் கதாப்பாத்திரத்தின் இளம் வயது சிறுமியாக நடித்து புகழ்பெற்றவர் ஷாயிரா வசிம். 16 வயதான வசிம் தனது தோழிகளுடன் காஷ்மீர் மநிலம் சென்றுள்ளார்.

அங்குள்ள டால் லேக் ஏரியை ஒட்டியுள்ள போலவார்டு சாலையில் ஷரியா வாசிம் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது கார் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.

நடைபாதையை தாண்டி ஏரியின் கைப்பிடிச்சுவரில் மோதி கார் நின்றது. இந்த சம்பவத்தில் அதிருஷ்டவசமாக ஷாரியா வசிம் உள்பட அனைவரும் காயமின்றி தப்பினர். பொதுச்சொத்துக்களுக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை.

SCROLL FOR NEXT