புதுடெல்லி,
இந்தியாவின் வணிக பொருட்கள் ஏற்றுமதி கடந்த பிப்ரவரி மாதத்தில் கணிசமாக குறைந் தது. ஜனவரி மாதத்தில் இப்பொருட்களின் ஏற்றுமதி 0.81 சதவீதம் சரிந்தது. ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு 3 ஆயிரத்து 661 கோடி டாலர் (இந்திய மதிப்பில் ரூ.3 லட்சத்து 36 ஆயிரத்து 812 கோடி) ஆகும்.
அதே சமயத்தில், பிப்ரவரி மாதத்தில் இந்தியாவின் இறக்குமதி 24.11 சதவீதம் அதிகரித்துள்ளது. 6 ஆயிரத்து 371 கோடி டாலர் மதிப்புள்ள பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. வர்த்தக பற்றாக்குறை 2 ஆயிரத்து 710 கோடி டாலராக அதிகரித்துள்ளது. போர் சூழ்நிலையையும் மீறி, நடப்பு மார்ச் மாதத்தில் ஏற்றுமதி உயர்ந்து வருவதாக மத்திய வர்த்தக செயலாளர் ராஜேஷ் அகர்வால் தெரிவித்தார்.