தேசிய செய்திகள்

தமிழகத்தின் 3 கல்லூரிகளுக்கு நிகர்நிலை அந்தஸ்து: மருத்துவ படிப்புக்கான 650 இடங்கள் பறிபோகும் அபாயம்.!

தமிழ்நாட்டில் உள்ள மூன்று சுயநிதி மருத்துவக் கல்லூரிகளுக்கு நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் உள்ள மூன்று சுயநிதி மருத்துவக் கல்லூரிகளுக்கு நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதால், இந்தகல்வி ஆண்டில் 650 எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோக வாய்ப்பு உள்ளதுடன் கல்விக்கட்டணம் பெருமளவு உயரவாய்ப்புள் ளது என கல்வியாளர்கள் கூறியுள்ளனர்.

நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து

தமிழ்நாட்டில் உள்ள மூன்று சுயநிதி மருத்துவக் கல்லூரிகளுக்கு நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதால், இந்த கல்வியாண்டில் மாநிலத்தின் பொதுப் பட்டியலிலிருந்து குறைந்தது 650 இடங்கள் நீக்கப்படும் வாய்ப்புள்ளது. மேலும் மூன்று கல்லூரிகள் பல்கலைக்கழக நிதிநிலைக் குழுவின் ஒப்புதலை எதிர்பார்க்கின்றன. அது கிடைத்தால், மாநில அரசு ஒதுக்கீட்டு இடங்களின் இழப்பு 700ஐத் தாண்டும்.

மருத்துவ படிப்புக்கான 650 இடங்கள்

இந்த மாற்றத்தால், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டின் கீழ் வரும் சுமார் 50 மருத்துவ இடங்களும் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.. அரசு ஒதுக்கீட்டு இடங்கள் குறைவதால், இந்த ஆண்டு மருத்துவச் சேர்க்கைக்கான கட்ஆப் மதிப் பெண் உயர்ந்து போட்டி மாறும் மிகவும் கடினமாகும். மேலும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக மாறும். இதனால், சுயநிதி கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டுக் கட்டணத்தை விட இவை பல மடங்கு அதிகமாகும்.

இந்த நிலைமையைச் சமாளிக்க, திருப்பூர், திருவள்ளூர் மற்றும் நாமக்கள் ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் தலா 50 இடங்களை உயர்த்த மாநில சுகாதாரத் துறை தேசிய மருத்துவ ஆணையத்திடம் அனுமதி கோரியுள்ளது. இதற்கான ஆய்வுகள் முடிவடைந்து, ஒப்புதலுக்காகக் காத்திருக்கின்றனர்.

மாநில சுகாதாரத் துறை இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசுக்குக் கடிதம் எழுதத் திட்டமிட்டுள்ளது. மேலும், திருப்பூர், திரு வள்ளூர் மற்றும் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரிகளில் தலா 50 இடங்களை உயர்த்த அனுமதி கோரி தமிழக அரசு விண்ணப்பித்துள்ளது.

கட்டணம்

மத்திய அரசு நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களுக்கு தனியாகக் கட்டணக் கட்டுப்பாடு எதுவும் விதிக்காததால், அங்குஆண்டுக்கு ரூ.20 லட் சம் முதல் ரூ.35 லட்சம் வரைகட்டணம் வசூலிக்கப்படுகிறது.

மேலும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஆண்டுக்கு ரூ.4.35 லட்சம் முதல் ரூ.5.40லட்சம் வரையிலும், மேலாண்மை ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.15 லட்சம் முதல் ரூ.16.20 லட் சம் வரையிலும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் மருத்துவக் நடுத்தர குடும்பங்களுக்கு கல்வி எட்டாக்கனியாக மாற வாய்ப்புள்ளது என கல்வியாளர்கள் கூறியுள்ளனர்.