திருவனந்தபுரம்,
கேரளம் மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 102 இடங்களில் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணி வெற்றி பெற்றது. இதன் மூலம் 10 ஆண்டுகளுக்கு பிறகு, காங்கிரஸ் மீண்டும் அரியணையில் அமர உள்ளது.
ஆனால், தேர்தல் முடிவு வந்து 9 நாட்கள் ஆகியும் முதல்-மந்திரியை தேர்வு செய்ய முடியாமல் காங்கிரசில் கடும் குழப்பம் நிலவி வருகிறது. முதல்-மந்திரி பதவியை பெற காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான கே.சி.வேணுகோபால், எதிர்க்கட்சி தலைவராக இருந்த வி.டி.சதீசன், மூத்த தலைவர் ரமேஷ் சென்னித்தலா ஆகிய 3 பேர் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இதற்கிடையே 3 பேருடைய ஆதரவாளர்களும் தனித்தனியாக பேரணி நடத்தியதோடு, சாலை நெடுகிலும் பேனர்கள் வைத்தனர். இதே நிலை நீடித்தால் காங்கிரஸ் தொண்டர்கள் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை காணப்பட்டது. இதையடுத்து இதுபோன்ற நடவடிக்கைகளில் யாரும் ஈடுபடக்கூடாது என்றும், யாருக்கும் ஆதரவு தெரிவித்து வெளிப்படையாக கருத்துகளை தெரிவிக்கக்கூடாது எனவும் காங்கிரஸ் மேலிடம் தெரிவித்து இருந்தது.
முதல்-மந்திரி யார் என்பதை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டு வரும் நிலையில், கோழிக்கோடு நகரில் காரச்சேரி பகுதியில் காங்கிரஸ் தொண்டர்கள் பெரிய பேனர் வைத்து உள்ளனர். அதில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகிய 2 பேருக்கும் காங்கிரஸ் தொண்டர்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
பேனரில், கே.சி.வேணுகோபால் உங்களுக்கு விருப்பப்பட்ட நபராக இருக்கலாம் ஆனால், அவரை மக்கள் முதல்-மந்திரி யாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தேர்தலில் வெற்றி பெறுவ தற்காக மட்டும் நீங்கள் வயநாட்டுக்கு வர வேண்டாம். இது போன்ற செயல்களால் மக்கள் உங்களுக்கு ஆதரவாக இருக்க மாட்டார்கள் என்று கூறப்பட்டு இருந்தது.
இதேபோல் வயநாடு மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் அருகே யும் பேனர் வைக்கப்பட்டு உள்ளது. அதில், கே.சி.வேணுகோ பாலை நீங்கள் தேர்வு செய்தால் கேரளம் மக்கள் உங்களை மன்னிக்க மாட்டார்கள். அதன் விளைவுகளை நீங்கள் சந்திக்க வேண்டி வரும் என்று ஆங்கிலத்தில் கூறப்பட்டு இருந்தது.
கேரளத்தில் முதல்-மந்திரி யார்? என்பதை முடிவு செய்ய காங்கிரஸ் மேலிடம் ஏற்கனவே எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தியது. இறுதி முடிவை ராகுல் காந்தி, மல்லிகார் ஜுன கார்கே ஆகிய 2 பேரும் அறிவிப்பார்கள் என்று காங்கிரஸ் மாநில தலவைர் சன்னி ஜோசப் தெரிவித்து இருந்தார். இதற்கிடையே ராகுல் காந்தி, பிரியங்கா காந்திக்கு எதிராக பேனர்கள் வைக்கப்பட்ட சம்பவம் கேரளத்தில் பரபரப்பை ஏற் டுத்தி உள்ளது.