தேசிய செய்திகள்

டெல்லியில் கடும் பனிமூட்டம்: 39 ரயில்கள் தாமதம், 13 ரயில்கள் ரத்து

டெல்லியில் கடும் பனிமூட்டம் நிலவுகிறது. பனிமூட்டம் காரணமாக 39 ரயில்கள் தாமதம் ஆகியுள்ளன. 13 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. #delhi | #fog

புதுடெல்லி,

டெல்லியில் கடந்த சில வாரங்களாகவே கடும் பனிமூட்டம் நிலவுகிறது. காலைவேளைகளில் கடும் குளிருடன் வெண் படலமாக பனிமூட்டம் காட்சியளிக்கிறது. இதனால், சில அடி தூரமே கண்ணுக்கு புலப்படுகின்றன். வாகன ஓட்டிகள் வாகனங்களின் முகப்பு விளக்குகளை எரிய விட்ட படியே செல்வதை காண முடிந்தது.

அடர் பனிமூட்டத்தால், ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. ரயில்கள் மெதுவாக இயக்கப்பட்டதால், 39 ரயில்கள் தாமதம் ஆகியுள்ளன. 13 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 4 ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. காற்று மாசுவும் டெல்லியில் அதிக அளவில் காணப்படுகிறது. #delhi | #fog