ai image 
தேசிய செய்திகள்

டெல்லி: காலணி ஆலையில் தீ விபத்து; 4 பேர் பலி

இதில், 3-வது தளத்தின் படிக்கட்டில் கிடந்த ஒருவரையும், 4-வது தளத்தில் இருந்த 5 பேரையும் போலீசார் மீட்டனர்.

புதுடெல்லி

டெல்லி காலணி ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் பலியாகி உள்ளனர். 2 பேருக்கு சிகிச்சை அளிக்கப்ட்டு வருகிறது.

டெல்லியின் மங்கோல்புரி தொழிற்பேட்டை பகுதியில் ஷூ (காலணி) உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இதன் முதல் யூனிட்டில் இரவு 9.30 மணியளவில் திடீரென்று தீப்பற்றி எரிந்தது. ஏறக்குறைய பல மணிநேரம் எரிந்த இந்த தீயை, தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்.

தீயணைப்பு வீரர்கள்

போலீசாரும் வரவழைக்கப்பட்டு, அதற்கு உதவியாக செயல்பட்டனர். ஆலையின் அடித்தளத்தில் தீப்பிடித்து கொண்டது. அது மற்ற பகுதிகளுக்கு பரவி விடாமல் இருக்க தீயணைப்பு வீரர்கள் உடனடியாக பணியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து நடந்த மீட்பு பணியில், ஆலைக்குள், 6 பேர் சுயநினைவின்றி கிடந்தனர். இதில், 3-வது தளத்தின் படிக்கட்டில் கிடந்த ஒருவரையும், 4-வது தளத்தில் இருந்த 5 பேரையும் போலீசார் மீட்டனர்.

அவர்கள் மங்கோல்புரியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். இதில், 4 பேர் வழியிலேயே உயிரிழந்து விட்டனர் என தெரிய வந்துள்ளது. மீதமுள்ள 2 பேருக்கு சிகிச்சை அளிக்கப்ட்டு வருகிறது.

SCROLL FOR NEXT