தேசிய செய்திகள்

கணவருடன் உல்லாசமாக இருக்கும்போது மனைவி செய்த விபரீத செயல்

நீண்ட நேரம் மகிழ்ச்சியாக இருக்ககூடிய மாத்திரை என்று கூறி நசியா அந்த மாத்திரை அவற்றை தண்ணீரில் கலந்து கொடுத்துள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில் காதலனுடன் சேர்ந்து கணவருடன் உல்லாசமாக இருக்கும்போது அந்தரங்க உறுப்பில் மின்சாரம் பாய்ச்சி கொன்ற மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.

வீட்டில் திருட்டு

டெல்லியின் தெற்கு பகுதியில் உள்ள சங்கம் விஹாரில் வசித்து வந்தவர் முன்னாலால் (55). கடந்த 10ம் தேதி முன்னா லால் சங்கம் விஹாரின் ரதியா மார்க் பகுதியில் உள்ள சாலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அதிகாலை 5 மணியளவில் முன்னாலால் சாலையில் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. முன்னா உடலில் பல காயங்கள் காணப்பட்டது. அவர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவரை சோதித்து பார்த்ததில் அவர் ஏற்கனவே இறந்தது தெரிய வந்தது. இதையடுத்து முன்னாவின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இது குறித்து முன்னா லால் மனைவி நசியாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவரிடம் விசாரணை நடத்தியதில் இரவில் வீட்டில் திருடர்கள் நுழைந்து திருட முயன்றனர் என்றும், அதனை தடுக்க முயன்ற தனது கணவரை அடித்து கொன்று விட்டு ஓடிவிட்டதாக நீலக்கண்ணீர் வடித்தார். இருப்பினும் போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது.

மனைவி மீது சந்தேகம்

சம்பவம் நடந்தபோது தான் தூங்கிக்கொண்டிருந்ததாக போலீசாரிடம் தெரிவித்தார். இதையடுத்து அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதில், பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. முன்னாவின் மனைவியும், அவரது காதலனும் சேர்ந்து இக்கொலையை செய்து இருப்பது தெரிய வந்தது.

இது குறித்து துணை போலீஸ் கமிஷனர் மித்தல் கூறியதாவது:-

நாங்கள் நசியாவிடம் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதில் முழு குற்றத்தையும் ஒப்புக்கொண்டார். அவர் தனது கணவரை தனது காதலர் சமன் மற்றும் அவரது கூட்டாளியுடன் சேர்ந்து கணவரை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.

25 வாலிபருடன் கள்ளக்காதல்

ஆரம்பத்தில் வீட்டிற்குள் திருடர்கள் நுழைந்து திருட முயன்றதாகவும், அவர்களை தனது கணவர் எதிர்த்து போராடியபோது திருடர்கள் அவரைக் கொன்றுவிட்டனர். அந்த நேரத்தில் தான் தூங்கிக் கொண்டிருந்ததாக குறிப்பிட்டார்.

அவர்களது வீட்டை சோதனை செய்ததில் தரையை சுத்தம் செய்ததும், ரத்தத்தின் தடயங்களை அகற்றவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதும் தெரிய வந்தது. விசாரணையில் நசியாவும், அவர்களது வீட்டிற்கு அருகில் உள்ள கடையில் வேலை செய்யும் சமன் என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இத்தொடர்பு திருமணம் தாண்டிய உறவாக மாறியது. கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். எனவே சமனிடம் தனது கணவரை கொலை செய்யும்படி நசியா கூறி வந்துள்ளார். இக்கொலைக்காக ரூ.5 லட்சம் கொடுப்பதாகவும் தெரிவித்தார்.

மர்ம உறுப்பில் மின்சாரம் பாய்ச்சி கொலை

அதோடு முன்பணமாக ரூ.20 ஆயிரம் கொடுத்துள்ளார். சமன் நசியாவுக்கு தூக்க மாத்திரைகளை கொடுத்துள்ளார். சம்பத்தன்று கணவர் முன்னாவை உல்லாசமாக இருக்கலாம் என்று கூறி நசியா அழைத்துள்ளார். மேலும் நீண்ட நேரம் மகிழ்ச்சியாக இருக்ககூடிய மாத்திரை என்று கூறி நசியா அந்த மாத்திரை அவற்றை தண்ணீரில் கலந்து கொலைக்கு முன் முன்னாவிடம் கொடுத்தார். தண்ணீரை குடித்தவுடன் முன்னா மயங்கிய பிறகு சமன் தனது கூட்டாளியுடன் வீட்டிற்குள் நுழைந்து, அவரை கயிற்றால் நெரித்தும், மின்சாரம் பாய்ச்சியும் கொலை செய்துள்ளார். முன்னாவின் மர்ம உறுப்பில் மின்சாரம் பாய்ச்சி இருப்பது பிரேத பரிசோதனையில் தெரிய வந்தது. இக்கொலையில் சமனுக்கு அவரது கூட்டாளி கிஷன் உதவி உள்ளார்.

முன்னா அடிக்கடி தனது மனைவியை அடித்து உதைத்ததாகவும், பணப்பிரச்சினை இருந்ததாகவும் தெரிய வந்துள்ளது. கணவர் கேட்கும்போதெல்லாம் பணம் தர மறுத்து வந்ததாகவும் மிகவும் கஞ்சதனப்படுவதாக கூறியுள்ளார். இதனால்தான் நசியா தனது காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்றுள்ளார். முன்னா சொத்து ரியல் எஸ்டேட் புரோக்கராக பணியாற்றி வந்தார். இந்த தம்பதிக்கு 3 பிள்ளைகள் உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.