தேசிய செய்திகள்

டெல்லி டெல்லி ராம்லீலா மைதானத்தில் ராவணனுடன் கரப்பான் பூச்சி உருவ பொம்மையையும் எரிக்க முடிவு

டெல்லியில் 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' தலைமை தேர்தல் ஆனையர் ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்

புதுடெல்லி,

டெல்லியில் நடைபெறும் ராம்லீலா நிகழ்ச்சியில், ராவணன், கும்பகர்ணன், மேகநாதன் ஆகியோரின் உருவ பொம்மைகளுடன் 30 அடி உயர கரப்பான் பூச்சியின் உருவ பொம்மையையும் எரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டெல்லியின் பிதாம்புரா பகுதியில் ஸ்ரீ கேஷவ் ராம் லீலா கமிட்டி சார்பில் ஆண்டுதோறும் ராம்லீலா நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு நிகழ்ச்சியில் கரப்பான் பூச்சியின் உருவ பொம்மையை எரிக்க முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து கமிட்டியின் தலைவரும், பா.ஜ.க. எம்.எல்.ஏ.வுமான அசோக் கோயல் கூறுகையில், கரப்பான் பூச்சி என்பது அழுக்கு மற்றும் சுகாதாரமற்ற சூழலின் அடையாளமாகக் கருதப்படுகிறது. வீடுகள், சுற்றுப்புறங்கள் மற்றும் சமூகத்தில் தூய்மையைப் பேண வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், இந்த நடவடிக்கை அரசியல் நோக்கம் கொண்டதல்ல என்றும், தீமையை நன்மை வெல்வதை எடுத்துக்காட்டும் விஜயதசமி விழாவின் நோக்கத்தை வலியுறுத்துவதே இதன் நோக்கம் என்றும் அவர் கூறினார்.

டெல்லியில் 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' தலைமை தேர்தல் ஆனையர் ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சூழலில், ராம்லீலா நிகழ்ச்சியில் கரப்பான் பூச்சியின் உருவ பொம்மையை எரிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது. இந்த ஏற்பாட்டுக்கும் அரசியல் போராட்டங்களுக்கும் தொடர்பு இல்லை என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறினாலும், தற்போதைய சூழலில் இந்த நிகழ்வு விவாதப்பொருளாகியுள்ளது.

SCROLL FOR NEXT