தேசிய செய்திகள்

பால் இல்லாத ‘பனீர்’ விற்பனைக்கு எதிராக டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு - மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

பனீருக்கு தடை விதிக்க வேண்டும் என்று பொதுநல மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

பண்ணை சாராத, பால் அல்லாத பொருட்கள் அடங்கிய ஒப்புமை பனீர் விற்பனைக்கு எதிராக டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் கீழ் பனீர் என்பது பண்ணை உற்பத்திப்பொருளாக வகைப்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில், வழக்கமான பனீரில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துகள் இல்லாத, இந்த பனீருக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், அந்த பொதுநல மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி நிதின் சாம்ப்ரே மற்றும் நீதிபதி சஞ்சய் சிங் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தில் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் மற்றும் மத்திய அரசின் நிலைப்பாட்டை அறிய நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். மேலும் டெல்லி அரசும் பதிலளிக்க அறிவுறுத்தப்பட்டது.

SCROLL FOR NEXT