புதுடெல்லி
டெல்லி மெட்ரோ, உலகின் 3-ம் பெரிய மெட்ரோ நெட்வொர்க் என்ற பெருமையை கொண்டது. 26 நகரங்களில் 1,143 கி.மீ. தொலைவை உள்ளடக்கிய இந்த நெட்வொர்க்கை பயன்படுத்தி தினசரி சராசரியாக 1.15 கோடி பேர் பயணம் செய்கின்றனர்.
நாடு முழுவதும் உள்ள மெட்ரோ ரெயில் அமைப்புகளில் 55 சதவீதம் பேர் டெல்லி மெட்ரோவை பயன்படுத்தி வருகின்றனர். இதில், கடந்த 2025-ம் ஆண்டில் டெல்லி மெட்ரோவில் 235.8 கோடி பயணிகள் பயணம் செய்திருக்கின்றனர்.
இது, அதற்கு முந்தின 2024-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, (223.5 கோடி பேர்) 12.3 கோடி கூடுதல் ஆகும். இதேபோன்று, 2025-ம் ஆண்டில் தினமும் 64.60 லட்சம் பேர் டெல்லி மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.
இதில், 2025-ம் ஆண்டு ஆகஸ்டு 8-ந்தேதி அதிக அளவாக 81 லட்சத்து 87 ஆயிரத்து 674 பேர் ஒரே நாளில் பயணித்தது சாதனை பதிவாக உள்ளது.