தேசிய செய்திகள்

டெல்லி மாணவர் போராட்டம் விவகாரம்; எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை 2 மணி வரை ஒத்திவைப்பு

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது அடக்குமுறையை கையாண்ட விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.

புதுடெல்லி

டெல்லியில் மாணவர்கள் போராட்டம் நடத்திய விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகளின் அமளியால் மக்களவை 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

ஒத்திவைப்பு

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், மக்களவை இன்று காலை வழக்கம்போல் கூடியதும், டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது அடக்குமுறையை கையாண்ட விவகாரம் தொடர்பாகவும், மேகதாது விவகாரம் தொடர்பாகவும், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.

அவர்களை இருக்கைகளில் அமரும்படி சபாநாயகர் கூறினார். எனினும், உறுப்பினர்கள் தொடர்ந்து கூச்சல் போட்டனர். எதிர்க்கட்சிகளின் அமளியால் மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.