தேசிய செய்திகள்

டெல்லியில் இருந்து சென்னை புறப்பட்ட விமானத்தில் தீ விபத்து - பயணிகள் அதிர்ச்சி

விமானத்தில் பயணிகள் அமர்ந்திருந்த இருக்கை அருகே தீ விபத்து ஏற்பட்டது.

ஐதராபாத்,

டெல்லியில் இருந்து சென்னை புறப்பட்ட விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

தலைநகர் டெல்லியில் இருந்து சென்னைக்கு இன்று மாலை இண்டிகோ விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் 200க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர்.

விமானத்தில் தீ விபத்து

இந்நிலையில், தெலுங்கானா வான்பரப்பில் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது விமானத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. விமானத்தில் பயணிகள் அமர்ந்திருந்த இருக்கை அருகே தீ விபத்து ஏற்பட்டது. அதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் கூச்சலிட்டனர்.

இதையடுத்து, விமானத்தை உடனடியாக விமானி தெலுங்கானா மாநிலம் சம்சாபாத் விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கினார். இதனை தொடர்ந்து விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். பின்னர், விமானத்தில் பற்றிய தீ அணைக்கப்பட்டது. பயணி வைத்திருந்த பவர்பேங் மூலம் தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளை, இந்த தீ விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT